பந்தை எறிகிறார் சுனில் நரேன்: எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு 

 

கொல்கத்தா அணியின் சுழல்பந்து வீச்சாளர் சுனில் நரைன் பந்து வீச்சை யாராலும் அடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பாக தோனி அவருடைய பந்தில் கடந்த பதிமூன்று ஆண்டுகால ஐபிஎல் தொடல் ஒரு பவுண்டரியோ அல்லது ஒரு சிக்சரோ அடித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான சுனில் நரேன் பந்தை எறிவதாக புகார் எழுந்துள்ளது. பஞ்சாப் அணியுடன் நடந்த போட்டியில் அவர் பந்தை எறிவதாக புகார் எழுந்ததால் நரேனுக்கு ஐபிஎல் நிர்வாகிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது 

அவர் சரியான வகையில் பந்தை வீசாமல் இருப்பதால் தான் அவரது பந்தை அடிக்க முடியவில்லை என்றும் விக்கெட்டுகள் விழுகின்றன என்று கூறப்படும் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web