வார்னர் அதிரடியால் வென்ற ஹைதராபாத் அணி!

ஐபில் தொடரின் 8வது போட்டி ராஜஸ்தான் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் 5 ரன்களிலேயே ரஷீத் கான் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். ஆனாலும் அஜங்கியா ரஹானே, சஞ்சு சாம்சன் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். அஜங்கியா ரஹானே 70 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
Sun risers hyderabad

ஐபில் தொடரின் 8வது போட்டி ராஜஸ்தான் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் நடைப்பெற்றது.

வார்னர் அதிரடியால் வென்ற ஹைதராபாத் அணி!

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் 5 ரன்களிலேயே ரஷீத் கான் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். ஆனாலும் அஜங்கியா ரஹானே, சஞ்சு சாம்சன் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர்.

அஜங்கியா ரஹானே 70 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஐபில் தொடரின் முதலாவது சதம் இதுவாகும். பென் ஸ்டோக்ஸ் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் அணியில் ரஷீத் கான் அர்மான் மற்றும் ஷாபாஸ் நதீம் இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ஹைதராபாத் அணி 199 என்ற கடினமான இலக்குடன் அடுத்து களிமிறங்கியது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னரும், ஜானி பெர்ஸ்டோவும் அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து ரன்களை சேர்த்தனர். டேவிட் வார்னர் 37 பந்துகளில் 69 ரன்களும், ஜானி பெர்ஸ்டோ 28 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். விஜய் சங்கர் 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். ரஷீத் கான் அர்மான் 19வது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிப் பெற செய்தார். அவர் 8 பந்தில் 15 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புடன் 201 ரன் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

ராஜஸ்தான் அணியில் ஷ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெயதேவ் உனட்கட் இருவரும் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இப்போட்டியில் ஆட்டநாயகனாக ரஷீத் கான் அர்மான் தேர்வு செய்யப்பட்டார்.

From around the web