திடீரென டிரெண்ட் ஆகும் தோனி ஹேஷ்டேக்: என்ன காரணம்?

 

கிரிக்கெட்டின் கடவுள் என சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் ரசிகர்கள் பல ஆண்டுகளாக கொண்டாடி  வரும் நிலையில் சச்சினுக்கு நிகராக கிரிக்கெட் ரசிகர்கள் தோனியையும் கொண்டாடி வருகின்றனர். அவர் இந்தியாவுக்காக அனைத்து உலக வகை கோப்பையையும் பெற்றுத் தந்தவர் என்பது மட்டுமின்றி தன்னுடைய ஓய்வுக்குப் பின் ஒரு பலமான அணியையும் உருவாக்கி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைக்கு இந்திய கிரிக்கெட் அணியில் ஃபார்மில் இருக்கும் நல்ல வீரர்கள் அனைவருமே தோனியால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி தான் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் தோனி என்ற வீரர் அறிமுகமானார் 

dhoni

இதனை அடுத்து நாளையுடன் அவர் கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தோனியின் ரசிகர்கள் சிறப்பு ஹாஷ்டாக் ஒன்றை பதிவு செய்து ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தோனியின் சாதனைகளையும் அவர் முக்கிய போட்டிகளில் எடுத்த ரன்கள் குறித்த தகவல்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் ஷாட் என்ற ஒன்றை அறிமுகப் படுத்தியதே தோனி என்றும் அவரது ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர்

இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவரது பணி மகத்தானது என்றும் சென்னை ரசிகர்கள் என்றும் தோனியை மறக்க மாட்டார்கள் என்றும் ரசிகர்கள் அந்த ஹேஷ்டேக்கை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web