இன்றும் ஒரு கேதார் ஜாதவ்வா? பஞ்சாப் ரசிகர்கள் அதிர்ச்சி

 

நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் 12 பந்துகளில் 7 ரன்கள் என ஆமை வேகத்தில் ரன் எடுத்த கேதார் ஜாதவ்வால் சென்னை அணி தோல்வி அடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த 201 ரன்கள் குவித்தது

202 என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கும் பஞ்சாப் அணி சற்று முன்வரை 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பூரன் மிக அபாரமாக விளையாடி வருகிறார் அவர் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று உலகம் முழுவதும் பாராட்டப்படும் மேக்ஸ்வெல் இன்று 12 பந்துகளை சந்தித்து வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனை அடுத்து அவர் ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 

202 என்ற இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருக்கும் பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் 12 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து அவுட் ஆனதை பார்க்கும்போது இவர் பஞ்சாப் அணியின் கேதர் ஜாதவ் என நெட்டிசன்கள் டுவிட்டரில் கிண்டலுடன் பதிவு செய்து வருகின்றனர் 

From around the web