இலங்கை பிரிமியர் லீக்: முக்கிய வீரர்கள் வெளியேறியதால் பரபரப்பு

 

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல் இலங்கையில் இலங்கை பிரீமியர் லீக் என்ற தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் 2020ஆண்டு ஆண்டின் இலங்கை பிரிமியர் தொடர் வரும் நவம்பர் 23-ம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

நவம்பர் 21 முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி முக்கிய கிரிக்கெட் வீரர்களான மில்லர், டீபிளஸ்சிஸ், டாவிட் மலன், பிஸ்லா மற்றும் ரஸல் உள்பட ஒருசிலர் இலங்கை பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் விளையாட வில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. காயம் உள்பட பல பிரச்சனைகள் காரணமாக அவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

இறுதிப்போட்டி அரையிறுதிப் போட்டி உள்பட மொத்தம் 12 போட்டிகள் மட்டுமே கொண்ட இந்த தொடரில் முக்கிய வீரர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் போட்டிகள் சுவராசியமாக இருக்காது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web