அடங்கிபோன பாகிஸ்தான்… இலங்கை அணி அசத்தல்…!!

பாகிஸ்தான்- இலங்கை கிரிக்கெட் அணிகள் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. அச்சுறுத்தல் காரணமாக பல முன்னணி வீரர்கள் போட்டியில் பங்கேற்கவில்லை. யார் பங்கேற்பார்கள் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், பல பாதுகாப்புகளை செய்யக் கோரி, அதன்பின்னர் விளையாடச் சென்றனர். முதல்நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது. அடுத்து நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மற்றும்
 
அடங்கிபோன பாகிஸ்தான்… இலங்கை அணி அசத்தல்…!!

பாகிஸ்தான்- இலங்கை கிரிக்கெட் அணிகள் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. அச்சுறுத்தல் காரணமாக பல முன்னணி வீரர்கள் போட்டியில் பங்கேற்கவில்லை.

யார் பங்கேற்பார்கள் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், பல பாதுகாப்புகளை செய்யக் கோரி, அதன்பின்னர் விளையாடச் சென்றனர். முதல்நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அடங்கிபோன பாகிஸ்தான்… இலங்கை அணி அசத்தல்…!!

அடுத்து நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது.

இதில் இலங்கை அணி டாஸ் வென்றது, அதன்படி முதலில் பேட்டிங்க் செய்தது. அதிரடியாக ஆடிய அணி, 6 விக்கெட்டுகளுடன் 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பனுகா ராஜபக்சா 77 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று பாகிஸ்தான் அணி ஆட்டத்தினை துவங்கியது.

அதில் பக்தர் சமான் 6 ரன்னும், பாபர் அசாம் 3  ரன்னும் எடுத்து அவுட் ஆக, அகமது ஷஸாத் 16 ரன்னிலும், உமர் அக்மல் ரன் எதுவும் எடுக்காமலும், சர்பராஸ் அகமது 26 ரன்களிலும், இமாத் வாசிம்  47 ரன்களில் அவுட் ஆகிப் போனார்கள்.

பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தொடரை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

From around the web