தென்ஆப்ரிக்கா ஆல் அவுட்… பிச்சு எடுத்த அஸ்வின் மற்றும் ஷமி!!

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்தியா- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்க்சில் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். அதிரடியாக ஆடிய இவர்கள், அதிக ரன்களை எடுத்தனர், அதாவது மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோகித் சர்மா 176 ரன்களும் எடுத்தனர். மழை காரணமாக முதல் ஆட்டம் நிறுத்தப்பட்டது, இது இரண்டாவது
 
தென்ஆப்ரிக்கா ஆல் அவுட்… பிச்சு எடுத்த அஸ்வின் மற்றும் ஷமி!!

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்தியா- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இந்தத் தொடரானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்க்சில் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். அதிரடியாக ஆடிய இவர்கள், அதிக ரன்களை எடுத்தனர், அதாவது மயங்க் அகர்வால்  215 ரன்களும், ரோகித் சர்மா 176 ரன்களும் எடுத்தனர்.

தென்ஆப்ரிக்கா ஆல் அவுட்… பிச்சு எடுத்த அஸ்வின் மற்றும் ஷமி!!

மழை காரணமாக முதல் ஆட்டம் நிறுத்தப்பட்டது, இது இரண்டாவது நாளாக நேற்று அடுத்தநாள் நடைபெற்றது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்தது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 385 ரன்களுக்கு 8 விக்கெட்களுடன் இருந்தது. அடுத்து தனது இன்னிங்க்சை தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 127 ரன்களும், புஜாரா 81 ரன்களும் எடுத்தனர்.

தென்ஆப்பிரிக்கா 395 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை நோக்கி ஆடியது,   ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் திணறி, தென்ஆப்பிரிக்க 191 ரன்களில் ஆல் அவுட்டானது. 

முகமது சமி 5 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

From around the web