அஜித் பட தயாரிப்பாளருக்காக இணையும் சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி!

 

அஜித் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’மங்காத்தா’ திரைப்படத்தை தயாரித்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் என்பதும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தயாநிதி அழகிரி தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி உள்ளார். ‘மாஸ்க்’ என்ற டைட்டில் கொண்ட இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் திரையுலக பிரபலங்கள் பலர் அவர் இயக்குனர் ஆனதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இந்த குறும்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. ’மாஸ்க்’ குறும்படத்தின் டீஸரை சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் தங்களுடைய டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட உள்ளனர். நாளை காலை 10 மணிக்கு வெளியாக இருக்கும் இந்த குறும்படத்தின் டீஸர் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதுகுறித்து தயாநிதி அழகிரி தனது டுவிட்டரில், ‘இரண்டு மிகப்பெரிய நடிகர்கள் இணைந்து ‘மாஸ்க்’ குறும்படத்தின் டீசரை நாளை காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளது எனக்கு பெருமையாக உள்ளது. இதைவிட அவர்களிடம் நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார்


 

From around the web