4வது ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய சிராஜ்: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சிட்னியில் நடைபெறும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சற்றுமுன் தொடங்கிய நிலையில் தற்போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

siraaj

7.1 ஓவர் வீசிய போது மழை வந்ததால் உணவு இடைவேளை விடப்பட்டது என்பதும் தற்போது மழை தொடர்ந்து கொண்டிருப்பதால் மீண்டும் போட்டி ஆரம்பிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று விடும் என்பதால் இந்திய அணியினர் இந்த போட்டியை வெல்ல தீவிர முயற்சி செய்து வருகின்றனர். மேலும் ரோகித் சர்மா மற்றும் சயனி ஆகிய இருவரின் வரவும் இந்திய அணிக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது 

இன்றைய போட்டியில் நான்காவது ஓவரிலேயே டேவிட் வார்னரின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தியதை அடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

From around the web