ராஜஸ்தான் அணிக்கு எளிய இலக்கு: வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேறுமா?

 

ஐபிஎல் தொடர் போட்டியில் 6 போட்டிகளில் விளையாடி நான்கில் தோல்வி அடைந்துள்ள ராஜஸ்தான் அணி இன்று ஐதராபாத் அணியுடன் மோதுகிறது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனை அடுத்து சன்ரைசர்ஸ் அணி களத்தில் இறங்கி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே எடுத்து உள்ளது. மணிஷ் பாண்டே 54 ரன்களும் கேப்டன் வார்னர் 48 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

159 என்பது துபாய் மைதானத்தில் மிகவும் குறைவான இலக்கு என்பதால் இந்த இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எளிதில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பட்லர் மற்றும் கேப்டன் ஸ்மித் நல்ல ஃபார்மில் உள்ளனர் என்பதும் அதிரடி மன்னன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் அதிரடியாக விளையாடினால் இந்த இலக்கை எளிதில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இன்றைய போட்டியில் வென்று ராஜஸ்தான் அணியை புள்ளி பட்டியலில் இருந்து முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் ஆச்சரியமாக பென் ஸ்டோக்ஸ் ஓப்பனிங் இறங்கி ஐந்து ரன்களில் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web