அஜித் பாணியில் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயாஸ் அய்யர்!

 

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகள் துபாயில் முடிவடைந்த நிலையில் தற்போது வீரர்கள்  அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்

நாடு திரும்பிய வீரர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊரில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் காலம் இருக்கும் நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தான் குவாரண்டைனில் இருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

ajith shreyas

அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் நான்கைந்து உருவமாக அஜித் அறையிலிருக்கும் வகையான காட்சிகள் வரும். அதேபோல்  ஸ்ரேயாஸ் அய்யர் தன்னுடைய அறையில் தானே நான்கிந்து பேர் இருப்பது போன்று புகைப்படத்தை போட்டோஷாப் செய்து பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படம்  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது 

அஜித் பாணியில் புகைப்படத்தை வெளியிட்ட  ஸ்ரேயாஸ் அய்யருக்கு அஜித் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web