ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி அபார வெற்றி!

 
ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி அபார வெற்றி!

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவானின் மிக அபாரமான ஆட்டம் காரணமாக டெல்லி அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இடம் முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்ததையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சுமாராக அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

delhi

இந்தநிலையில் 196 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடிய நிலையில் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் அடித்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பஞ்சாப் அணி கொடுத்த 196 என்ற இலக்கை 18.2 ஓவர்களில் எட்டி, டெல்லி அணி அபார வெற்றி பெற்றது

இந்த நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் பெங்களூர் முதல் இடத்திலும் 4 புள்ளிகளுடன் பெங்களூரு அணி 2-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 92 ரன்கள் அடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web