புதுப் பிரச்சினையில் மாட்டிக் கொண்ட சானியா மிர்சா!

டென்னிஸில் தனக்கென ஒரு பெரிய இடத்தினைப் பிடித்ததோடு, இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை பெற்று குவித்தவர் சானியா மிர்சா. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டபின் இவர் டென்னிஸில் இருந்து விலகினார். உலகக்கோப்பையின்போது இவர் கணவர் மற்றும் குழந்தையுடன் போட்டியினைக் காண இங்கிலாந்து சென்றார், ஓய்வு நாளில் இவர்கள் குடும்பமாக மற்ற இடங்களுக்கு சென்றுவர அது பெரிய அளவில் பிரச்சினையை சோயிப் மாலிக்குக்கு உருவாக்கியது. ரசிகர்கள் பலரும் இவரை மோசமாக விமர்சித்தனர்,
 
புதுப் பிரச்சினையில் மாட்டிக் கொண்ட சானியா மிர்சா!

டென்னிஸில் தனக்கென ஒரு பெரிய இடத்தினைப் பிடித்ததோடு,  இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை பெற்று குவித்தவர் சானியா மிர்சா.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டபின் இவர் டென்னிஸில் இருந்து விலகினார்.

புதுப் பிரச்சினையில் மாட்டிக் கொண்ட சானியா மிர்சா!

உலகக்கோப்பையின்போது இவர் கணவர் மற்றும் குழந்தையுடன் போட்டியினைக் காண இங்கிலாந்து சென்றார், ஓய்வு நாளில் இவர்கள் குடும்பமாக மற்ற இடங்களுக்கு சென்றுவர அது பெரிய அளவில் பிரச்சினையை சோயிப் மாலிக்குக்கு உருவாக்கியது.

ரசிகர்கள் பலரும் இவரை மோசமாக விமர்சித்தனர், அதாவது ஆட்டத்தில் கவனம் செலுத்தாமல் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு கவனம் சிதறியது குறித்து பலரும் கேட்க, இவர் ட்விட்டரில் விளக்கம் கொடுத்து கோபமாக பதிவிட்டு இருந்தார்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சானியா மிர்சா, “விளையாட்டுவீரர்களின் கவனச்சிதறலுக்கு அவர்களது மனைவி காரணம் கிடையாது, அந்தந்த வீரர்களே காரணம். விராட் கோலி அவுட்டானால் அவரின் மனைவி அனுஷ்கா சர்மா என்ன செய்வார்? ஆதலால் இந்தமாதிரியான பேச்சுகள் எழுவதே தவறு” என்று சுட்டிக் காட்டினார்.

உலகக்கோப்பை பிரச்சினையில் இருந்து மீண்டுவரவே இவ்வளவு நாள் ஆன நிலையில், அதை மீண்டும் கிளறினால் பிரச்சினை மிண்டும் தொடரும் என பலரும் கூறி வருகின்றனர்.

தற்போது இதுகுறித்த விமர்சனங்களும் அதிகரித்துவருகிறது.

From around the web