33 வருடங்களுக்கு முன் இதே நாள்: உலகக்கோப்பையில் ஒரு ரன்னில் இந்தியா தோல்வி

 

கடந்த 1987ஆம் ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் உலக கோப்பை லீக் போட்டி ஒன்றில்  33 வருடங்களுக்கு முன் இதே நாளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் ஒரே ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1987ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது 

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்தது.  மார்ஷ் அபாரமாக விளையாடி 110 ரன்கள் அடித்தார். டேவிட் பூன் 49 ரன்களும் ஜோன்ஸ் 39 ரன்களும் எடுத்தனர்

இந்த நிலையில் 271 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கவாஸ்கர் 37 ரன்களும் ஸ்ரீகாந்த் 70 ரன்களும் அடித்தனர். இந்த போட்டியின் மூலம் முதன்முதலாக ஒரு நாள் போட்டியில் அறிமுகமான நவ்ஜோத்சிங் சித்து 73 ரன்கள் அடித்தார் 

இதன்பின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததால் 49.5 ஓவர்களில் இந்திய அணி 269 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி ஆண்டு 33 வருடங்களுக்கு முன் இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய என்பது குறிப்பிடத்தக்கது

From around the web