விடைபெறும்போது கண்ணீரை கட்டுப்படுத்திய தோனி: சாக்‌ஷியின் உருக்கமான பதிவு

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தல தோனி ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய கிரிக்கெட் அணியின் இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் தல தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்து இருந்தனர் தல தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் தோனியின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் தோனியின் ஓய்வுக்குப் பின் அவரது
 

விடைபெறும்போது கண்ணீரை கட்டுப்படுத்திய தோனி: சாக்‌ஷியின் உருக்கமான பதிவு

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தல தோனி ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய கிரிக்கெட் அணியின் இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் தல தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்

தல தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் தோனியின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் தோனியின் ஓய்வுக்குப் பின் அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ’நீங்கள் சாதித்ததை பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும். விளையாட்டுக்கு உங்களது மிகச் சிறந்த பங்களிப்பு போற்றுதலுக்குரியது. சாதனைக்குரிய நபரான உங்களை குறித்து நான் பெருமைபடுகிறேன். இந்த விளையாட்டை நீங்கள் மிக தீவிரமாக விரும்பினீர்கள் என்பதும் இந்த விளையாட்டில் இருந்து விடைபெறும் போது நீங்கள் எவ்வளவு கண்ணணீரையை கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்றும் நான் அறிவேன். இருப்பினும் உங்களது ஆரோக்கியம் மகிழ்ச்சி மிகவும் முக்கியம். இனி உங்கள் முன்னே பல அற்புதமான விஷயங்கள் உள்ளது என்று கூறியுள்ளார்

சாக்ஸி தோனியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது

From around the web