கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய சச்சின் டெண்டுல்கர்: வைரல் வீடியோ!

 

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்காக திரையுலகினர் அரசியல்வாதிகள் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சில நகைச்சுவையான வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

sachin

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு சில நொடிகளே இருக்கும் அந்த வீடியோவில் அவர் கிறிஸ்மஸ் தாத்தா போன்ற வேடத்தில் இருந்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த வீடியோ  தற்போது வைரல் ஆகி வருவது மட்டுமின்றி ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ பதிவு செய்த ஒருசில மணி நேரத்தில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web