சிக்ஸ் அடித்து மேட்சை முடித்து கொடுத்த ருத்ராஜ்: அபார ஸ்பார்க்

 

இன்று நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் மிக அபாரமாக விளையாடி போட்டியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்

முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தன. இதனை அடுத்து 146 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 

தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார் இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று தோனி கூறிய நிலையில் கடந்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனாலும் இந்த முறை ருத்ராஜ் கெய்க்வாட்  மிக அபாரமாக விளையாடி தனக்கு ஸ்பார்க் உள்ளது என்பதை நிரூபித்துள்ளார் 

மேலும் வெற்றி பெற1 ரன் தேவை என்ற நிலையில் ருத்ராஜ் கெய்க்வாட் சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அடுத்து சிஎஸ்கே அணி தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web