ரூ.3 கோடி பரிசுத் தொகை: முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

 

இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு ரூ. 3 கோடி பரிசு அளிக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூபாய் 3 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூபாய் இரண்டு கோடியும், வெண்கல பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூபாய் ஒரு கோடியும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்

மேலும் வாழ்க்கையை விளையாட்டு என்று சொல்வார்கள், அரசியலையும் விளையாட்டாக சிலர் நினைப்பவர்களும் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் விளையாட்டை கூட நாங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டு துறையை மேம்படுத்துவது உறுதியாக இருக்கிறோம் என்றும் தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்

தோனி சிக்ஸ் அடிக்கும் போது நாமே சிக்ஸ் அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்றும் ரொனால்டோ கோல் அடித்தால் நாமே கோல் அடித்தது போல் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறிய முதல்வர் அதுபோல்தான் தமிழ்நாட்டின் வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் தங்கம் பெற்றால் தமிழ்நாட்டு மக்களே கொண்டாடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web