தோனிக்கு ரூ.15 கோடி வேஸ்ட்: முன்னார் கிரிக்கெட் வீரர் கருத்து

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 15 கோடி கொடுப்பது வேஸ்ட் என்றும் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு புதிதாக இரண்டு அல்லது மூன்று இளம் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அவர்கள் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அடுத்த ஆண்டில் தோனியை அணியில் இருந்து வெளியேற்றிவிட்டு அவருக்கு கொடுக்கப்படும் ரூ.15 கோடி பணத்தில் மூன்று இளைஞர்களை எடுக்கலாம் என்றும் இந்த வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிஸ்செய்யக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்

dhoni and aakash

தோனியை அணியில் சேர்க்க வேண்டாம் என்றும் 2021 ஐபிஎல் தொடரில் அவர் விளையாடி, ஒருவேளை தோனி 2022 ஆம் ஆண்டு ரிடையர் ஆகி விட்டால் 2022ஆம் ஆண்டில் தோனிக்கு பதிலாக இளம் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் 

தோனியை அணியில் இருந்து வெளியேற்றுவதால் சிஎஸ்கே அணிக்கு 15 கோடி மிச்சமாகும் என்றும் இந்த பணத்தை வைத்து நல்ல சர்வதேச வீரர்களை தேர்வு செய்யலாம் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web