ஆஷஸ் டெஸ்ட்டில் சதம் அடித்த ரோரி பர்ன்ஸ்

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 284 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித் (144 ரன்) சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய்
 
ஆஷஸ் டெஸ்ட்டில் சதம் அடித்த ரோரி பர்ன்ஸ்

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 284 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித் (144 ரன்) சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்திருந்தது.

ஆஷஸ் டெஸ்ட்டில் சதம் அடித்த ரோரி பர்ன்ஸ்

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் 10 ரன்னில் கேட்ச் ஆனார்.

ஜோ ரூட் 57 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ டென்லி 18 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 5 ரன்னிலும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சில் சிக்கினர். இதற்கிடையில் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் சதத்தை பூர்த்தி செய்தார்.

2-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 125 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

From around the web