ரோஹித் இன், பும்ரா, போல்ட் அவுட்: டாஸ் வென்ற ஐதராபாத் பிளே ஆப் செல்லுமா?

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56வது போட்டி இன்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இன்று ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பதும் தோல்வி அடைந்தால் கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

எனவே இன்றைய போட்டி ஐதராபாத் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் கொல்கத்தா உள்ளே செல்லும் என்ற நிலையில் மும்பை அணியின் உள்ள முன்னணி பந்துவீச்சாளர்களான டிரென்ட் போல்ட் மற்றும் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை கொல்கத்தா அணிக்கு ஏற்படுத்தியுள்ளது 

மேலும் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விளையாடும் இரண்டு அணிகளில் உள்ள வீரர்கள் பின்வருமாறு:


ஐதராபாத் அணி: டேவிட் வார்னர், சஹா, மணிஷ் பாண்டே, வில்லியம்சன், கார்க், ஹோல்டர், அப்துல் சமது, ரஷித் கான், நதீம், சந்தீப் சர்மா, நடராஜன்

மும்பை அணி: ரோஹித் சர்மா, டீகாக், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திவாரி, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், கெளல்டர் நைல், பாட்டின்சன், சஹார், குல்கர்னி

From around the web