சிஎஸ்கே போட்டிக்காக மீண்டும் திரும்பிய ஆர்ஜே பாலாஜி: ரசிகர்கள் மகிழ்ச்சி!

 

நடிகர், இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வியாபார பணிகள் காரணமாக இடையில் வர்ணனை பணியில் இருந்து விலகி சென்னை திரும்பினார் 

இதனை அடுத்து ஆர்ஜே பாலாஜி இல்லாத வர்ணனை சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது இன்று முதல் மீண்டும் ஆர்ஜே பாலாஜி வர்ணனையாளராக திரும்பியுள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் 

இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியில் அவர் வர்ணனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசிறிய இடைவேளைக்குப்பின் ஆர்ஜ் பாலாஜியின் வர்ணனையை கேட்க ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web