ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு: ஷேட் வாட்சனின் சாதனைகள் என்னென்ன?

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வாட்சன், ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்

அவர் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 3874 ரன்களும், 94 விக்கெட்டுகளும் 40 கேட்ச்களும், 4 சதங்களும் 21 அரை சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 முதல் 2015 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய வாட்சன், 2015 முதல் 2018 வரை பெங்களூர் அணியில் விளையாடினார். அதன்பிறகு 2018 முதல் 2020 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அவருக்கு அவர் 2008 மற்றும் 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தொடர் நாயகன்விருதுகளை பெற்றுள்ளார்

2018 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வாட்சன், ஐதராபாத் அணிக்கு எதிராக 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த வாட்சனின் ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் குறிப்பிடத்தக்கது

வாட்சன் தனது ஓய்வு முடிவை அறிவித்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

From around the web