பிளேயர் லிஸ்டை தூக்கிப்போட்டு ப்லேலிஸ்ட்க்கு மாறிய "ஆர் சி பி"!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் இசை வரிசை!
 
rcb

தற்போது உள்ள மக்கள் மத்தியில் கிரிக்கெட் திருவிழா என்று சொன்னால் முதலில் அனைவரும் சொல்வது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது அனைவராலும் பார்க்கப்படும் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் பல அணிகளில் பங்கேற்று ஒவ்வொருவரும் தங்களுக்கு எதிராக பலப்பரீட்சை மேற்கொள்வர். மேலும் ஐபிஎல் மிகவும் அனைவராலும் பார்க்கவும் ரசிக்கப்படும் பொழுதுபோக்கு கிரிக்கெட் தொடராக காணப்படுகிறது.ipl

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஆனது ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. மேலும் முதல் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது மிகவும் பலம் வாய்ந்த அணியாக கடந்த போட்டிகளில் காணப்பட்டது. மேலும் இந்த ஆண்டு எப்படியாவது பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வென்று விடுமென்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி அனைத்து ரத்தானது மிகவும் சோகத்தை அளிக்கிறது.

காரணம் என்னவெனில் ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாலும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் கொரோனா காணப்பட்டதால் இரு தினங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டியானது இந்தாண்டு நடைபெறாது என ரத்து செய்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி விளையாடும் வீரர்களும் சோகத்தில் இருந்த நிலையில், தற்போது பெங்களூர் அணியின் ட்விட்டர் பக்கம் ஆனது சில சுவாரசியமான தகவல்களை அவ்வப்போது வெளியிடுகிறது. அதன்படி தற்போது லாக்டவுன் காலகட்டத்தில் பிளேயர்லிஸ்ட் பதிலாக ப்ளே லிஸ்ட் இருப்பதால் அவர்கள் இந்த லாக்டவுனில் பாடல்கள் மூலம் நேரத்தை செலவிட போவதாக எதிர்பார்க்கப் படுகிறது.

From around the web