விளையாட்டை விட வீட்டை கவனிப்பதற்காக விரைந்து சென்று உள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்!

வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் டெல்லி கேப்பிடல் அணியில் இருந்து தற்போது விலகி உள்ளதாக அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்!
 
விளையாட்டை விட வீட்டை கவனிப்பதற்காக விரைந்து சென்று உள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்!

தற்போது நாடே கொரோனா கொந்தளிக்கும் போது ஒரு தரப்பினர் மட்டும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்கள் கிரிக்கெட் பிரியர்கள். காரணம் என்னவெனில் கிரிக்கெட் வீரர்களின் திருவிழாவாக காணப்படும் ஐபிஎல் திருவிழா தொடங்கியது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் போட்டியானது தினந்தோறும் இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்குகிறது.இதனால் வேலைக்கு செல்பவர்கள் கூட தங்களது பணிகளை விரைவில் முடித்து விட்டு வீட்டிற்கு வந்து ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவை கண்டு மகிழ்கின்றனர்.ricky ponding

மேலும் இந்தாண்டு சென்னை மும்பை பெங்களூரு போன்ற ரசிகர்கள் கூட்டம் கொண்ட அணிகள் மிகவும் பலமாக  காணப்படுவதால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் இவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் பட்டாளம் கொண்ட டெல்லி கேப்பிடல் அணியும் மிகவும் பலமாக காணப்படுகிறது. மேலும் அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் நல்லதொரு தொடக்கத்தை கொடுக்கின்றனர். மேலும் ரிஷப் பண்ட் தலைமை தாங்கி வழி நடத்துகின்றார்.

மேலும் இதில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் இந்தியன் பிளேயர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தற்போது அணியில் இருந்து விலகியதாக அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். மேலும் அவர் அணியில் இருந்து விலகி விரைவாக சென்னை திரும்புவதாகவும் கூறினார். காரணம் என்னவெனில் அவரது குடும்பத்தினருக்கு ஆட்கொல்லி நோயான கொரோனா  தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்போது டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் கூறினார். மேலும் அவர் விரைவில் வந்து மீண்டும் அணியில் இடம் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

From around the web