ஒரே பந்தில் இரண்டு முறை அவுட் ஆன ரஷித்கான்: சுவாரஸ்ய தகவல்!

 

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரே பந்தில் வீரர் ஒருவர் இரண்டு முறை அவுட்டானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நேற்றைய போட்டியில் 19-வது ஓவரை வீச வந்த ஷர்துல் தாக்கூர் வீசிய கடைசி பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன் ரஷித் கான். ஆனால் அவர் அடித்த பந்தை சிஎஸ்கே அணியின் தீபக் சஹார் அபாரமாக கேட்ச் பிடித்ததால் ரஷீத் கான் அவுட்டானார் 

ஆனால் அதற்கு முன்னரே ரஷீத் கானின் கால் ஸ்டம்பில் பட்டுவிட்டதால் அவர் ஹிட்விக்கெட் மூலம் அவுட்டாகிவிட்டார் என்பதும் இந்த அவுட்டை லெக் அம்பயர் கொடுத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே தீபக்கால் பிடிக்கப்பட்ட கேட்ச் மற்றும் ஹிட் விக்கெட் ஆகிய இரண்டு முறை ஒரே பந்தில் ரஷீத்கான்அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web