ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ்-லெவன் பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் உடன் இன்று போட்டியிடுகிறது!
 
ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ்-லெவன் பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!

இந்தியாவில் கோடை காலம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வந்து மே மாதம் தான். மே மாதம் தொடங்கினார் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் ஆனது தலைவிரித்தாடும்.கோடை காலத்திலும் ஒரு கூட்டத்தினர் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். கிரிக்கெட் விரும்பிகள் கோடை காலம் தொடங்கியதும் மிகவும் விமர்சையாக நடைபெறும்  கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் தொடங்கிவிடும். இதனால் கிரிக்கெட் விரும்பிகள் கிரிக்கெட் பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்கள்.

ipl

மேலும் ஐபிஎல் இல் கடந்த முறை சாம்பியன் ஆக இருந்தவர்கள் மும்பை இந்தியன்ஸ்.  அவர்களே ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் என்றழைக்கப்படும் சிஎஸ்கே அணியானது இரண்டாவது இடத்தில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.மேலும் ஐபிஎல் திருவிழாவானது சில தினங்கள் முன்பாக தொடங்கியது .ஆனால் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது.

இன்று இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ளவுள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் உள்ளார். சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும்  ஜாஸ் பட்லர் இருப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணியின் கேப்டனாக கே எல் ராகுல் அறிவித்து அவர் தலைமையில் இன்றைய தினம் போட்டி நடைபெற உள்ளது. இதில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், நிக்கலஸ் பூரன், இந்திய வீரரான சமி போன்றோர் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web