பெங்களூரு அணிக்கு சவாலான இலக்கு கொடுத்த ராஜஸ்தான்

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இன்று 33வது போட்டி துபாய் மைதானத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இதனை அடுத்து உத்தப்பா மற்றும் பென்ஸ்டோக் களமிறங்கினார். உத்தப்பா 41 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களும் எடுத்து அவுட் ஆகிய நிலையில் அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் களமிறங்கி 9 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார் 

இந்த நிலையில் கேப்டன் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி 36 பந்துகளில் 57 ரன்கள் அடித்து மிக அபாரமாக விளையாடினார். அவருடைய பொறுப்பான ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில்177 ரன்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

எனவே பெங்களூர் அணிக்கு சவாலான இலக்கான 178 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் அணி கொடுத்து உள்ளது என்பதும் இந்த இலக்கை பெங்களூர் அணி எட்டுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 

பெங்களூர் அணியை பொறுத்தவரை பின்ச், படிக்கல், விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ் ஆகிய நான்கு சூப்பர் பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எளிதில் எட்டிவிடுவார்கள் என்றே கருதப்படுகிறது

From around the web