தொடர் தோல்வியால் துவண்ட பஞ்சாபுக்கு இன்று வெற்றி கிடைக்குமா? 165 ரன்கள் இலக்கு!

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் 6 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, தொடர் தோல்வியால் துவண்டு இருக்கும் நிலையில் இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதில் கில் 57 ரன்களும் கேப்டன் தினேஷ் கார்த்திக் 58 ரன்களும் எடுத்து உள்ளனர்  

இந்த நிலையில் 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்று முன் வரை அந்த அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பஞ்சாப் அணி அடுத்து வரும் போட்டிகளில் மன உறுதியுடன் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web