18 பந்துகளில் 22 ரன்கள் அடிக்காத பஞ்சாப்: சிஎஸ்கே பாணியில் தோல்வி!

 

இன்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 18 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்த பஞ்சாப் அணி அந்த ரன்களை அடிக்காமல் தோல்வி அடைந்தது

17வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணிக்கு வெற்றி பெற 22 ரன்கள் தேவை என்ற நிலையில் 18ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் பூரன் அவுட் ஆனதை அடுத்து அந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது

அதன் பின்னர் 18 ஓவர் முடிவில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 19 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தன அதுமட்டுமின்றி அந்த ஓவரில் ஆறு ரன்கள் மட்டுமே கிடைத்தது இதனை அடுத்து கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் மேக்ஸ்வெல் எவ்வளவு முயன்றும் 11 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்ததால் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 

இந்த போட்டியில் மிக அருமையாக சுனில் நரைன் பந்து வீசி 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் பிரசிஷ் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை அணி பாணியில் பஞ்சாப் அணி கையில் கிடைத்த வெற்றியை கைநழுவ விட்டது

From around the web