புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- ஜெய்ப்பூர் அணி இன்று மோதல்

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இரவு 8.30 மணிக்கு களம் இறங்குகின்றன. தமிழ் தலைவாஸ் அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றியும், 3 தோல்வியும், 2 முறை டையிலும் என புள்ளிப்பட்டியலில் 7 வது இட்த்தில் உள்ளது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 2
 
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- ஜெய்ப்பூர் அணி இன்று மோதல்

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று  நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இரவு 8.30 மணிக்கு களம் இறங்குகின்றன.

தமிழ் தலைவாஸ் அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றியும், 3 தோல்வியும், 2 முறை டையிலும் என புள்ளிப்பட்டியலில் 7 வது இட்த்தில் உள்ளது.

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- ஜெய்ப்பூர் அணி இன்று மோதல்

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிடத்தில் உள்ளது.

தமிழ் தலைவாஸ் இந்த சீசனில் பெரிதாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இல்லை எனப் பலரும் வருத்தமடைந்துள்ளனர். மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது பெரும் ஏமாற்றமாகவே உள்ளது என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. புனேரி பால்டன் அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி, ஒரு முறை சமநிலையிலும் முடிந்தது. நடப்பு சாம்பியனான பெங்களூரு புல்ஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி கண்டு இருக்கிறது.

தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றியினை நோக்கி ரசிகர்கள் பேரார்வத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web