ஹெலிகாப்டரில் இருந்து சேப்பாக்கத்தை புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி!


 

 

பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பதையும் அவரது வருகையை அடுத்து சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் 8,000 கோடி ரூபாய் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடமும் 10 நிமிடம் தனியாக ஆலோசனை செய்துள்ளார்

modi chepauk

இதனையடுத்து அவர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு விமான நிலையத்திற்கும் அங்கிருந்து கேரளாவுக்கும் சென்றார். இந்த நிலையில் ஹெலிகாப்டரில் அவர் சென்றுக் கொண்டு இருந்தபோது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியை அவர் பார்த்து ரசித்ததாகவும் புகைப்படம் எடுத்ததாகவும் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார் 

ஹெலிகாப்டரில் இருந்து சென்னை விமான நிலைம் செல்லும் வழியில் சேப்பாக்கம் மைதானத்தை படம் பிடித்தேன். போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் பதிவு செய்துள்ளார். பிரதமர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

 


 

From around the web