நூலிழை வாய்ப்பும் பறிபோனது: பரிதாபமாக வெளியேறியது சிஎஸ்கே!

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராயல் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை அணி பரிதாபமாக இழந்தது

நேற்றைய போட்டியில் மும்பை அணி 195 ரன்கள் எடுத்தது. எனவே ராஜஸ்தான் அணி 196 என்ற இலக்கை பென்ஸ்டாக் மற்றும் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி எடுத்து காட்டியது. 18.2 ஓவர்களிலேயே இலக்கை ராஜஸ்தான் எட்டி விட்டதால் இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றதோடு ரன்ரேட்டும் அபாரமாக கிடைத்துள்ளது

இந்த வெற்றியின் காரணமாக சென்னை அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாத நிலையில் நிரந்தரமாக தொடரில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது 

கடந்த பதிமூன்று சீசன்களில் இரண்டு முறை தடை செய்யப்பட்டது போக அனைத்து தொடர்களிலும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது என்பதும் முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாத வகையில் சென்னை அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web