டாஸ் வென்ற பொல்லார்டு எடுத்த அதிரடி முடிவு!

 
டாஸ் வென்ற பொல்லார்டு எடுத்த அதிரடி முடிவு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று 48 ஆவது லீக் போட்டியில் அபுதாபியில் நடைபெறுகிறது

இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் 14 புள்ளிகள் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு உறுதியாக தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டியை வெல்ல பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடதக்கது 

இன்றைய 11 பேர்கள் அணியில் விளையாடும் வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு

மும்பை அணி: இஷான் கிஷான், டீகாக், சூர்யகுமார் யாதவ், திவாரி, பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, சாஹர், டிரண்ட் போல்ட், பும்ரா

பெங்களூரு அணி: படிக்கல், ஃபிலிப்பெட், கோஹ்லி, டிவில்லியர்ஸ், குர்கீர்த்சிங், டூப், மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், சாஹல், சிராஜ், ஸ்டெய்ன்

பெங்களூரு அணியின் பின்ச், சயினி மற்றும் மொயின் ஆகியோர் காயம் காரணமாக இன்று அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web