தல தோனிக்கு பிரதமர் மோடி கடிதம்: என்ன எழுதியிருந்தார்?

கடந்த 15ஆம் தேதி நாடு சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென இரவு ஏழு 7.39 மணிக்கு தல தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக எடுத்த முடிவை அறிவித்தார் இதனை அடுத்து சமூக வலைதளங்கள் ஸ்தம்பிக்கும் அளவுக்கு தோனி குறித்த பதிவுகள் பதிவாகியது. அரசியல் தலைவர்கள் முதல் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் பிரபலங்கள் வரை திரையுலகினர்களில் இருந்து சாமானிய குடிமகன் வரை தோனி குறித்த பதிவுகளை செய்ததால் விடிய விடிய
 

தல தோனிக்கு பிரதமர் மோடி கடிதம்: என்ன எழுதியிருந்தார்?

கடந்த 15ஆம் தேதி நாடு சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென இரவு ஏழு 7.39 மணிக்கு தல தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக எடுத்த முடிவை அறிவித்தார்

இதனை அடுத்து சமூக வலைதளங்கள் ஸ்தம்பிக்கும் அளவுக்கு தோனி குறித்த பதிவுகள் பதிவாகியது. அரசியல் தலைவர்கள் முதல் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் பிரபலங்கள் வரை திரையுலகினர்களில் இருந்து சாமானிய குடிமகன் வரை தோனி குறித்த பதிவுகளை செய்ததால் விடிய விடிய தோனி குறித்த ஹேஷ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒரு சிலரும் கிரிக்கெட்டுக்காகவே அவர் தன் வாழ்நாளை அர்ப்பணிக்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி தோனி என்று புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, தோனி ஓய்வு அறிவிப்பால் 130 கோடி இந்தியர்களுக்கும் ஏமாற்றம் என்று குறிப்பிட்டிருந்தார்

மேலும் தோனி ஓய்வு பெற்ற தகவலை கேட்டதும் ஏமாற்றம் அடைந்தேன் என்றும், உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன், விக்கெட் கீப்பர் என வரலாறு தோனியை பெருமைப்படுத்தும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தல தோனிக்கு பிரதமர் மோடி கடிதம்: என்ன எழுதியிருந்தார்?
தல தோனிக்கு பிரதமர் மோடி கடிதம்: என்ன எழுதியிருந்தார்?

From around the web