ஐபிஎல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 14வது ஐபிஎல் எப்போது?

 

ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா இந்தியாவில் நடைபெறும் என்பதும் ஒரு சில ஆண்டுகள் மட்டும் வெளி நாட்டில் நடைபெறும் என்பது தெரிந்ததே

இந்தியாவில் நடந்தாலும் வெளிநாட்டில் நடந்தாலும் தொலைக்காட்சிகளில் இந்த போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்ப்பார்கள் என்பதும் இந்த ஐபிஎல் போட்டிக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு 13வது ஐபிஎல் போட்டி மிகவும் தாமதமாக நடந்தது. அதிலும் இந்தியாவில் நடத்தாமல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் மும்பை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது என்பது தெரிந்ததே 

ipl

இந்த நிலையில் வழக்கம்போல் 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உரிய நேரத்தில் நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 14 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் தான் நடக்கும் என்றும் கூறப்பட்டு இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடப்பு ஆண்டிற்கான ரஞ்சி டிராபி தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ள நிலையில் ஐபிஎல் தொடருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 14-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

From around the web