வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்: அர்ஜூனா விருது பெற்ற வீரர்

2019 ஆம் ஆண்டுக்கான அர்ஜூனா விருது வென்ற தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டிங் வீரர் எஸ்.பாஸ்கரன் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். பாஸ்கரன் டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் அர்ஜூனா விருதும், ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையும் பெற்றார். இவருக்கு நேற்று காலை சென்னை விமான சிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், “பாடி பில்டிங் துறைக்கு இதுவரை அர்ஜூனா விருது வழங்கப்பட்டதில்லை, நானே அவ்விருதினை பெறும் முதல் வீரனாகிறேன். என்னுடைய கடின
 
வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்: அர்ஜூனா விருது பெற்ற வீரர்

2019 ஆம் ஆண்டுக்கான அர்ஜூனா விருது வென்ற தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டிங் வீரர்  எஸ்.பாஸ்கரன் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார்.

பாஸ்கரன் டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் அர்ஜூனா விருதும், ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையும் பெற்றார்.

 இவருக்கு நேற்று காலை சென்னை விமான சிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்: அர்ஜூனா விருது பெற்ற வீரர்

அப்போது அவர் கூறுகையில், “பாடி பில்டிங் துறைக்கு இதுவரை அர்ஜூனா விருது வழங்கப்பட்டதில்லை, நானே அவ்விருதினை பெறும் முதல் வீரனாகிறேன்.

என்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த வரமாக இதனை நினைக்கிறேன் என்றும், மத்திய அரசின் மூலம் 2000 ஆம் ஆண்டு நான் கிடைக்கப் பெற்றேன்.


தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்பில் விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் பாடி பில்டிங் துறை  சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது மேலும் மன வருத்தத்தை அளிக்கிறது, தற்போது இத்துறைக்கான அங்கீகாரம் கிடைக்கத் துவங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

From around the web