பாரா ஒலிம்பிக் போட்டி: கடைசி நாளில் இந்தியாவுக்கு தங்கம்

 
olympic

கடந்த சில நாட்களாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இன்று உடன் அந்த போட்டிகள் முடிவடைந்தன. இன்றைய கடைசி நாளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் கிடைத்ததை அடுத்து இந்தியாவுக்கு மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதனை அடுத்து இந்தியாவுக்குக் கிடைக்கும் ஐந்தாவது தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா நாகர்2 வயது இருக்கும் போதே உயரக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் முடங்கி இருக்காமல் தன்னுடைய கனவான பேட்மிட்டன் போட்டியில் சாதித்து காட்டி தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என இந்தியா மொத்தம் 19 பதக்கங்களை வென்று 24வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 96 தங்கம் 60 வெள்ளி 51 வெண்கலம் என 207 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் எஸ்.ஹெச் 6 பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பங்கேற்றார்.

From around the web