7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி

 

பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 26ஆம் தேதி கராச்சியில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 220 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்தது 

இதனை அடுத்து முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணிக்கு 87 என்ற ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

SA vs Pakistan

இந்த நிலையில் இந்த தொடரில் முதல் வெற்றியைப் பாகிஸ்தான் பெற்றுள்ளதை அடுத்து 1-0 என்ற கணக்கில் புள்ளி பட்டியலில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்த பவத் அலாம் என்பவர் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தென்னாபிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் முதல் போட்டியே தோல்வியில் முடிந்த நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web