ஒரே ஒரு சிக்ஸ், 6 ஓவர்களாக பவுண்டரி இல்லை: சிஎஸ்கேவின் சொதப்பல் ஆட்டம்!

 

நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொதப்பல் ஆட்டத்தால் அந்த அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது 

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி வீரர்கள் அனைவரும் சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர். பிபிஷா 64 ரன்கள், தவான் 35 ரன்கள், ரிஷப் பண்ட் 37 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்கள் எடுத்தனர் 

ஆனால் நேற்று களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ஒருவர் கூட உருப்படியாக பேட்டிங் செய்யவில்லை. அதுமட்டுமின்றி பந்துகளையும் வீணடித்தனர். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்சில் வாட்சன் அடித்த ஒரே ஒரு சிக்ஸ் தவிர அதன் பின்னர் ஒரு சிக்ஸ் கூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

அதே போல் நேற்று கேதார் ஜாதவ் மற்றும் டூபிளஸ்சிஸ் ஆடியபோது 6 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை என்பது சென்னையின் ஆமை வேக ஆட்டத்திற்கு உதாரணமாக அமைந்தது. இறுதியில் தோனி ரன்கள் அடிக்க சுழற்றினாலும் பந்தில் பேட் படவில்லை என்பதால் அவருடைய ஆட்டமும் சொதப்பலாக இருந்தது

இதனையடுத்து சென்னை அணி 20 ஓவர்களில் 131 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணிக்கு இது இரண்டாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் சொதப்பிய தீபக் சஹர், பியுஷ் சாவ்லா, ஹாசில்வுட் மற்றும் ஜடேஜா ஆகியோர்களாலும், பேட்டிங்கில் சொதப்பிய முரளி விஜய், வாட்சன், கெய்க்வாட், ஜாதவ், தோனி ஆகியோர்களாலும் நேற்றைய போட்டியில் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web