நால்வரில் ஒருவர் ஆல்ரவுண்டர் கட்டாயம் வேண்டும்: தோல்விக்கு பின் விராத் கோஹ்லி பேட்டி!

 
virat

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தோல்விக்கு பின் பேட்டியளித்த இந்திய கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் அதிக ரன் சேர்க்காததே காரணம் என்றும் பந்துவீச்சாளர்களை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார் 

ஆனால் அதே நேரத்தில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்கு தேவை என்றும் அவர்களில் ஒருவர் ஆல்-ரவுண்டராக இருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் இதேபோன்ற அணியில் ஏற்கனவே பலமுறை வெற்றி பெற்றுள்ளோம் என்றும் அவர் கூறினார். மேலும் மழையும் தோல்விக்கு ஒரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

நேற்றைய போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது தான் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web