மீண்டும் ஒரு தங்கம், ஒரு வெண்கலம்: இந்தியாவுக்கு குவியும் பதக்கங்கள்!

 
para batminton

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்து வருகிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இன்று காலை ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது என்பதும் இதனை அடுத்து இந்தியாவின் பதக்க பட்டியல் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை செய்துள்ளார்

பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரரை இந்திய வீரர் பிரமோத் பக்த் வீழ்த்தியதன் மூலம் பிரம்மோத் பகத் அவர்களுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்மிட்டன் பேட் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம் கிடைத்துள்ளதை அடுத்து இந்தியாவின் மொத்த பதக்கப் பட்டியல் 17 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web