ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை: தோனியை 13 ஆண்டுகளாக கட்டுப்படுத்தும் நரேன்

 

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது 

சென்னை அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தும் வெற்றியை நழுவ விட்டதற்கு கேதார் ஜாதவ் முக்கிய காரணமாக இருந்தாலும் வாட்சன் தவிர மற்ற பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பணியை சரியாக செய்யவில்லை என்பதே உண்மையான காரணம் ஆகும் 

குறிப்பாக நேற்றைய பந்துவீச்சில் தீபக் சஹர் மிகவும் சொதப்பினார். அதேபோல் தோனியும் தனது பேட்டிங்கில் வழக்கம்போல் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுனில் நரைன் பந்து வீச்சில் அவர் ரன் அடிக்க திணறினார் என்பதும் அதிக பந்துகளை வீண் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் மட்டுமின்றி கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் சுனில் நரைன் பந்துகளை தோனி அடிக்க தவறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சுனில் நரேன் வீசிய 63 பந்துகளை எதிர்கொண்ட தோனி, அதில் வெறும் அவர் 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பதும் இந்த 30 ரன்களிலும் என்று அவர் பவுண்டரியோ, சிக்சரோ அடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருமுறை சுனில் நரேனிடம் தோனி விக்கெட்டையும் பறிகொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

நேற்றைய போட்டியில் சுனில் நரேன் 11வது ஓவரில் களமிறங்கி சென்னை அணியின் ரன்களை கட்டுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web