15 ஓவர் வரை விக்கெட் இல்லை: 5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள்: பஞ்சாப் பவுலிங் 

 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் லீக் போட்டி ஒன்றில் ஐதராபாத் அணி பஞ்சாப் அணீயுடன் மோதியதில் மோதியதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 201 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 202 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது 

இந்த போட்டியில் பஞ்சாப் அணி ஆரம்பத்தில் மோசமாக பந்து வீசினாலும் கடைசி 5 ஓவர்களில் மிக அசத்தலாக பந்து வீசியது. வார்னர் மற்றும் பெயர்ஸ்டோ ஆகிய இருவரும் தலா 52 மற்றும் 97 ரன்கள் அடித்ததன் காரணமாக 15 ஓவரில் ஐதராபாத் அணிக்கு விக்கெட்டே விழவில்லை

15 ஓவர்களில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 16ஆவது ஓவரை வீச வந்த பிஷ்னாய், வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு வரிசையாக பெயர்ஸ்டோ, அப்துல் சமத் ஆகியோர்களின் விக்கெட்டை பிஷ்னாய் வீழ்த்தினார். இன்னொரு பக்கம் மனிஷ் பாண்டேம் கார்க் விக்கெட்டுக்களை அர்தீப்சிங் வீழ்த்த, ஷமி, அபிஷேக் வர்மா விக்கெட்டை வீழ்த்தினார்.

முதல் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 160 ரன்கள் எடுத்திருந்த ஐதராபாத் அணி அடுத்த 5 ஓவர்களில் 44 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது 

From around the web