விக்கெட் இல்லை, ஆனாலும் சூப்பர் பவுலிங்: ரஷித்கானுக்கு பாராட்டு

 

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி கடைசி வரை போராடி 7 ரன்களில் தோல்வியடைந்தது 

இந்தத் தோல்வியின் மூலம் சென்னை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் சென்னை அணி இப்போது தான் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

சென்னை அணியின் வெற்றிக்காக கேப்டன் தோனி கடைசி வரை போராடி ஐதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக சென்னை அணியின் வெற்றி தடுக்கப்பட்டது

குறிப்பாக நேற்று பந்துவீசிய ரஷித்கான் மிக அபாரமாக பந்துவீசினார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி 12ரன்கள் மட்டுமே கொடுத்தார் என்பதும் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் அவரது பந்து வீச்சில் தோனி உள்பட எந்த முன்னணி பேட்ஸ்மேன்களும் ரன்கள் அடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

முதல் ஓவரில் ஒரே ஒரு ரன்னும், இரண்டாவது ஓவரிலும் ஒரே ஒரு ரன்னும், மூன்றாவது ஓவரில் 3 ரன்களும், நான்காவது ஓவரில் 8 ரன்களும், மட்டுமே அவர் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

ரஷித்கான் மட்டுமின்றி நேற்று புவனேஷ் குமார் மற்றும் நடராஜன் ஆகியவர்களும் மிக அபாரமாக பந்து வீசியதால் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web