இந்திய அணியின் வெற்றிக்கு டுவிட் போட்ட நடராஜன்! ஏன் இந்த தாமதம்?


 

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முடிவடைந்த 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் எடுத்ததோடு அபாரமாக பேட்டிங் செய்து செஞ்சுரி அடித்த அஸ்வினுக்கு பாராட்டுக்கள் குவிந்தது அதுமட்டுமன்றி அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

india

இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றியை உலகமே நேற்று முதல் பாராட்டி வரும் நிலையில் தமிழக வீரரான நடராஜர் சற்று முன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்திய அணியின் அபார ஆட்டம் காரணமாக வெற்றி பெற்றுள்ளது என்றும் இது ஒரு குழுவினராக சேர்ந்து விளையாடிய ஆட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

நடராஜனின் இந்த பதிவிற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வந்த போதிலும் ஒரு நாள் கழித்து தாமதமாக டுவிட் போட்டது ஏன் என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் நடராஜன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web