மருத்துவமனை படுக்கையில் நடராஜன்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

 
மருத்துவமனை படுக்கையில் நடராஜன்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்தில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார் என்றும் இதனை ஐதராபாத் அணி உறுதி செய்தது என்பதையும் பார்த்தோம் 

இந்த நிலையில் நடராஜன் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு எனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

natarajan

மேலும் தன்னுடைய காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகவும் தற்போது குணமாகி வருவதாகவும் விரைவில் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

அதிவேகமாக யார்க்கர் பந்துவீசும் திறமை உள்ள நடராஜனை களத்தில் பார்த்துவிட்டு தற்போது மருத்துவமனை படுக்கையில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இருப்பினும் அவர் விரைவில் குணமாகி விடுவார் என்ற தகவலால் ரசிகர்களுக்கு ஆறுதல் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web