கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை செய்த சாதனை:

 

நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் இந்த வெற்றியால் அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் 148 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணி எடுத்ததால் 149 என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடியது. குவிண்டன் டீகாக் மிக அபாரமாக விளையாடி 76 ரன்களும் ரோகித் சர்மா 35 ரன்களும் எடுத்ததை அடுத்து 16.5 ஓவர்களிலேயே 149 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது 

இந்த நிலையில் கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி சாதனை செய்துள்ளது. இதுவரை இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் மும்பை அணி 21 முறை வெற்றி பெற்றுள்ளது என்பதும் 6 முறை மட்டுமே தோல்வி அணியின் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டிகளில் 77.7 சதவீதம் வெற்றியை மும்பை அணி பெற்றுள்ளது என்பது ஒரு குறிப்பிட்டத்தக்க சாதனையாகும்

நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக குவிண்டன் டீகாக் நடைபெற்று முடிந்த 8 போட்டிகளில் முதல் நான்கு போட்டிகளில் 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பதும், ஆனால் அடுத்த நான்கு போட்டிகளில் 221 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web