மும்பை அபார வெற்றி: 2வது போட்டியில் டெல்லி வெற்றி பெறுமா?

 
மும்பை அபார வெற்றி: 2வது போட்டியில் டெல்லி வெற்றி பெறுமா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் முதலாவது போட்டியான மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே அளித்திருந்த நிலையில் மும்பை அணி 172 என்ற இலக்கை 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்து உள்ளது. இதனை அடுத்து மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் அந்த அணி 4வது இடத்தை பிடித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

delhi vs kolkotta

இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் 2வது போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து கொல்கத்தா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது

அந்த அணி சற்று முன் வரை 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்த போட்டியில் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்று டெல்லி அணி வெற்றி பெற்றால் பெங்களூரு அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web