9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி: மைனஸ் ரன்ரேட்டை பெற்ற டெல்லி!

 

இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 51 ஆவது போட்டியில் டெல்லி அணியை மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது 

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 2110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 111 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 14.2 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய இஷான் கிஷான் 47 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார் என்பதும் இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என்பதும் குறிப்பிடதக்கது 

இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகள் பெற்று மும்பை அணி தனது பிளே ஆஃப் சுற்றை மீண்டும் உறுதி செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படு மோசமான தோல்வியை அடைந்த டெல்லி அணியின் ரன் ரேட் பிலஸ்ஸில் இருந்து மைனசுக்கு மாறி உள்ளது என்பதும் தற்போது அதன் -0.159  என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த அணி 14 புள்ளிகள் பெற்றிருப்பதால் மூன்றாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலைய்ல் இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி நடைபெற உள்ளது 

From around the web